வியாழன், 29 மார்ச், 2018

முகம் பிரகாசம் அடைய:
            முல்தானி மிட்டி பொடி ஒரு கரண்டி
             கஸ்தூரி மஞ்சள் கால் கரண்டி
             பால் ஒரு கரண்டி
    இம்மூன்றையும் மேல் குறிப்பிட்ட அளவு எடுத்து கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகம் கழுவவும்.
பயன்கள்:
           1.வெயிலினால் ஏற்படும் கருமை குறையும்
          2.முகம் பொலிவு பெறும்.

சனி, 30 ஜூலை, 2011

கண் குறைபாடு இருந்தால் அதற்கான தீர்வு,


கண்களில் ஏற்படும் பார்வை கோளாறுகள் இரண்டு வகையாக பிரிக்கப்படும்.
1. "மயோபியாஅல்லது கிட்டப் பார்வை

2. "
ஹைப்பர்மோட்டிரோப்பியாஅல்லது தூரப் பார்வை


 மயோபியா'வில்தொலைவில் உள்ள எழுத்துக்கள் மற்றும் பொருட்கள் மங்கலாக தெரியும். அருகில் உள்ள பொருட்கள் தெளிவாக தெரியும். இதுபிறந்த குழந்தையிலிருந்து முதியவர் வரையாருக்கும் வரலாம். பொதுவாகசிறு வயதிலேயே கண்டுபிடித்து விடலாம்.தொலைதூர கண்பார்வை குறைவுதலைவலிகண்ணில் நீர் வழிதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுக்குவகுப்பில்போர்டில் எழுதும் எழுத்துக்கள் மங்கலாக தெரிகிறது என்பர். 
மேலும்கண்களை வேகமாக அடித்தல்அதிக சோர்வு நிலை மற்றும் கண்ணை சுற்றி வலி போன்ற பிரச்னைகளும் வரலாம். மயோபியா உள்ளவர்களுக்கு, "மைனஸ் பவர்இருக்கும். மேற்கண்ட சிரமங்கள் இருந்தால்உடனே கண் மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும்.
கண்ணாடிகான்டாக்ட் லென்ஸ் போன்ற தீர்வுகள் இதற்கு உண்டு. இந்த தேதியில்பல நவீன முறை சிகிச்சைகள் இந்தியாவில்குறிப்பாக தமிழகத்தில் செய்யப்படுகின்றன. கண்ணாடி அணிவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவே, "லாசிக்எனும் லேசர் முறை சிகிச்சை கொண்டு வரப்பட்டது. "சையாப்டிக்ஸ்' (Zyoptix) எனும் லேசர் முறையில்கண்ணில் இருக்கும், 
"
மைனஸ் பவர்குறைக்கப்படுகிறது. இப்போதுநவீன லேசர் சிகிச்சையான, "இன்ட்ராலேஸ்' (Intralase) முறை மூலம்பார்வை குறைபாட்டை சரி செய்து கொள்ளலாம்.
கருவிழியின் தடிமன் குறைவாக இருப்பின்அதை வெறும், "சையாப்டிக்ஸ்மூலம் சரி செய்ய இயலாது. ஆனால், "இன்ட்ராலேஸ்உதவியுடன் இதை முழுமையாக குணப்படுத்த முடியும். மேலும், "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்'சில்பக்க விளைவுகள் மிகவும் குறைவாக காணப்படும்.
கண்ணாடி அணிந்தும் கண் பார்வை குறைவாகவே இருக்கும் நோயாளிகளுக்கு, "ஆர்ப்ஸ்கேன்' (Orbscan)மற்றும் "அபரோமேட்டிரி'(Aberrometry) ஆய்வு செய்யப்பட்டுபின்னர், "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்செய்யப்படும். பொதுவாக கண்ணாடி அணிந்தும் கண் பார்வை குறைவாக உள்ளவர்கள்இந்த முறை சிகிச்சைக்கு பின்முழுமையான பார்வை பெறுகின்றனர். இதை, "அபரோப்பியாஎன்று அழைக்கிறோம்.
லேசர் முறையில்பாதி, "பிலேட்முறையிலும்பாதி, "லேசர்' (எக்சைமர்) வழியாகவும் சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதுள்ள, "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்முறை சிகிச்சையில்லாசிக் சிகிச்சை முழுவதும்,"பெம்டோசெகண்ட்' ((femtosecond) லேசர் மூலம் செய்யப்படுகிறது. இதன் மூலம்பார்வை குறைபாடு சீராவது மட்டும் இல்லாமல்பார்வைத் திறனும் நன்றாக இருக்கும். இந்த சிகிச்சை முறையில்பக்க விளைவுகளும் குறைவு. லேசர் முறை சிகிச்சையில்பெரும்பாலான பக்கவிளைவுகள் கிடையாது. கண் கூசுவதுகண் உறுத்தல் போன்ற சிறிய விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம். அவ்வாறு வந்தாலும்அதற்கு மருந்து மூலம் தீர்வு காணப்படும். 18 வயது நிறைந்தவர்கள்இரண்டு கண்களிலும் பார்வைத் திறன் குறைபாட்டில் சமநிலை அடைந்தவர்கள் மற்றும் கருவிழியில் வேறு எந்த குறைபாடும் இல்லாதவர்கள்இந்த சிகிச்சைக்கு உகந்தவர்கள். சில நேரங்களில்சிறு வயதிலேயே, "அபரோப்பியாகாரணமாக கண் பார்வை குறைவு ஏற்பட்டால்இந்த சிகிச்சை செய்யலாம். இந்த, "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்முறை லேசர் சிகிச்சைக்குமயக்கம் கொடுக்க தேவையில்லை. கண்களில் சொட்டு மருந்து (Local Anesthesia) மூலமாக உணர்ச்சிகளை குறைக்க வைத்துலேசர் சிகிச்சை செய்யப்படும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை செய்ய தேவையில்லை. ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை மற்றும் ஆய்வு முடிவுறும். இரண்டு கண்களுக்கும் ஒரே நாளில்ஒரே முறையில் சிகிச்சை பெறலாம். முதல் இரண்டு நாட்கள்கண்ணில் நீர் கசிவு மற்றும் உறுத்தல் இருந்தாலும்பெரும்பாலான நோயாளிகளிடம்ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும். "ஹைப்பர்மெட்ரோபியாஎனும் கண் குறைபாடு ஏற்பட்டால்தூரப் பார்வை குறைவாக தெரியும். "பிளஸ் பவர்அதிகமாக இருக்கும். இதற்கும் லேசர் முறை சிகிச்சை செய்யலாம். குழந்தைகளுக்கு கண் குறைபாடு இருந்தால்சிறு வயதிலேயே அதற்கான தீர்வு,கண்ணாடி அணிய வேண்டும். இல்லையெனில்பிற்காலத்தில் கண்பார்வை சீராக வராமல்,குறைவாகவே நின்று விடும்.

சிறுமியின் கற்பை காப்பாற்றிய குர்ஆன் வசனங்கள்!


ஜெத்தா: சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்கு அதிகமாக திருமணங்கள் பெரும் ஹால்களில் வாடகைக்கு பிடித்து நடத்தப்படும். அது போல் ஒரு திருமண வைபவத்தில் பெண்கள் பகுதிக்கு ஒரு சவுதி காமுகன் வந்துள்ளான். 10 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனியாக நிற்கவும் ‘என் காரில் மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு உள்ளது. எனது கார் வரை வர முடியுமா பெண்ணே!’ என்று அவன் கேட்டுள்ளான். திருமணத்துக்கு வந்த உறவினர் என்று நினைத்து அவனுடன் உதவி செய்ய அந்த பெண் சென்றுள்ளாள். வாகனத்துக்கு பக்கத்தில் சென்றவுடன் ‘காரில் ஏறு! பரிசுப் பொருள் வீட்டில் இருக்கிறது. எடுத்துக் கொண்டு வந்து விடலாம்’ என்று சொல்லிக் கொண்டே பின் சீட்டில் அந்த பெண்ணை தள்ளி, வண்டியையும் எடுத்து விட்டான். சாப்பாடு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்ததால் இங்கு நடந்த இந்த களேபரங்கள் பெண்ணின் குடும்பத்தின் கவனத்துக்கு வரவில்லை.
 
வெளியேற முயற்ச்சித்த அந்த பெண்ணை ‘சத்தம் போடாதே!’ என்று மிரட்டவும் செய்துள்ளான். ‘உனது தகப்பனாரை எனக்குத் தெரியும். நான் போனில் பேசிக் கொள்கிறேன்’ என்று சொல்லவும் சற்று அமைதியாகியிருக்கிறாள் அந்த பெண். அவனின் வீடும் வருகிறது. வீட்டினுள் வந்த அவன் அந்த பெண்ணை அழைத்து சென்று ஒரு அறையில் பூட்டியிருக்கிறான். 10 வயதே ஆன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள் எல்லாம் நடந்திருக்கிறது.
 
பிறகு ஹாலில் அமர்ந்த அவன் சீசா குடிக்க ஆரம்பித்துள்ளான். அரபுகள் நீண்ட குழாய் மூலமாக புகையை இழுத்து விடுவது ஒரு வழக்கம். இதற்கு சீசா குடித்தல் என்று சொல்வார்கள். படங்களில் கூட பார்த்திருக்கலாம். சிலர் இதில் போதை மருந்துகளையும் கலந்து குடிப்பது உண்டு. அரசுக்கு தெரிந்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்.
 
வீட்டில் யாரும் இல்லாததும் அவனுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. சீசா குடித்து முடிந்தவுடன் அந்த பெண்ணின் அருகே நெருங்கி வந்துள்ளான். நடக்கப் போவதை உணர்ந்து கொண்ட அந்த பெண் தனக்கு தெரிந்த குர்ஆன் வசனங்களை மளமளவென்று வேகமாக ஓத ஆரம்பிக்கிறாள். இதனால் கோபம் உண்டான அவன் ‘குர்ஆன் ஓதுவதை நிறுத்து’ என்று கூறி முகத்தில் அடித்திருக்கிறான். இதே போல் பலமுறை முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் அந்த பெண் குர்ஆனை ஓதுவதும் அவன் அடிப்பதுமாக இரவு முழுதும் நடந்திருக்கிறது.
 
“Every time he came closer to me, I started reciting Quran and he would withdraw” she said.
 
அவனும் அரபி மொழி பேசுபவன். அந்த வசனங்கள் என்ன சொல்கிறது என்பது விளங்கியதால் அந்த பெண்ணிடம் அவன் நெருங்க மனது இடம் தரவில்லை. இதுபோல் பலமுறை முயற்ச்சித்தும் முடியாமல் போக முடிவில் தனது தவறை உணருகிறான். காலையும் நெருங்கியது. அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு எங்கு பிடித்தானோ அந்த இடத்திலேயே அந்த பெண்ணை இறக்கி விட்டு தலைமறைவாகியிருக்கிறான்.
 
திருமண மண்டபத்தில் காலை நேரமாகையால் யாரும் இல்லை. பிறகு வழியில் சென்ற ஒருவரை நிறுத்தி தனது தகப்பனின் செல் நம்பரை அந்த பெண் கொடுத்துள்ளாள். அந்த நல்ல மனிதர் அந்த பெண்ணின் தகப்பனோடு பேசி அவரை வரவழைத்தார். தனது மகளை கண்டவுடன் தந்தை அழுதது நெகிழ்ச்சியாக இருந்தது.
 
-நன்றி: அரப் நியூஸ்
21-06-2011
 
இங்கு நாம் ஒன்றை யோசிக்க வேண்டும். நமது நாட்டை விட இது போன்ற தவறுகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கக் கூடிய நாடுதான் சவுதி. இருந்தும் துணிந்து ஒரு பெண்ணை கடத்தி சென்றவனை சமயோஜிதமாக குர்ஆன் வசனங்களை கொண்டு அவனை ஒரு வழிக்கு கொண்டு வந்துள்ளாள் அந்த பெண். இத்தகைய மன உறுதி ஒரு சில பேருக்குத்தான் வரும். அது இறைவனின் வார்த்தை என்பதை இருவரும் உணர்ந்ததால்தான் ஒரு பெரும் தவறு நடக்கவிருந்தது தவிர்க்கப்பட்டது.
 
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
 
இந்த சம்பவத்தை இன்று நான் படித்த போது முகமது நபி முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சமபவத்தை சொன்னது உடன் ஞாபகம் வந்தது. அதையும் பகிருகிறேன்.
 
2272. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் ‘நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!” என்று தமக்குள் கூறினர். 
அவர்களில் ஒருவர் ‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!
மற்றொருவர், ‘இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ‘முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!” என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர், ‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!” என்று கூறினார். ‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!” என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!” என்றார். ‘நான் உம்மை கேலி செய்யவில்லை!” என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!”
என அப்துல்லாஹ்வின் உமர்(ரலி) அறிவித்தார்.